3வது ஒருநாள் போட்டி; நியூசிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற வங்காளதேசம்..!
|3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.
நேப்பியர்,
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் 2 ஆட்டங்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இன்று கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 31.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 98 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஷோரிபுல் இஸ்லாம், சவுமியா சர்கார், தன்சின் ஹசன் ஷகிப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி 15.1 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 99 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது.