< Back
கிரிக்கெட்
தொடர்ந்து 30 டெஸ்ட் இன்னிங்ஸ்...ரோகித் சர்மா படைத்த புதிய சாதனை...!

Image Courtesy: AFP

கிரிக்கெட்

தொடர்ந்து 30 டெஸ்ட் இன்னிங்ஸ்...ரோகித் சர்மா படைத்த புதிய சாதனை...!

தினத்தந்தி
|
24 July 2023 10:50 AM IST

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது.


இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 438 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் 255 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

2-வது இன்னிங்சில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 365 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 4-வது நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதல் இன்னிங்சில் 80 ரன்களும், 2-வது இன்னிங்சில் 57 ரன்களும் சேர்த்தார்.

இதன்மூலம் தொடர்ச்சியாக 30 டெஸ்ட் இன்னிங்சில் இரட்டை இலக்க ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். இவர் கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து இரட்டை இலக்க ரன்களுக்கு கீழ் அடித்தது கிடையாது.

இதற்கு முன் இலங்கை வீரர் ஜெயவர்தனே 2001-02-ல் 29 இன்னிங்சில் இரட்டை இலக்க ரன்கள் அடித்திருந்தார்.

1951-53-ல் லென் ஹட்டன் 25 முறையும், 1961-65-ல் ரோஹன் ரஹ்காய் 25 முறையும, 2012-14-ல் டி வில்லியர்ஸ் 24 முறையும் தொடர்ச்சியாக இரட்டை இலக்க ரன்களை சேர்த்திருந்தனர்.

ரோகித் சர்மாவின் கடைசி 30 டெஸ்ட் இன்னிங்ஸ்:-

12, 161, 26, 66, 25*, 49, 34, 30, 36, 12*, 83, 21, 19, 59, 11, 127, 29, 15, 46, 120, 32, 31, 12, 12, 35, 15, 43, 103, 80, 57.

மேலும் செய்திகள்