< Back
கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை

image courtesy:twitter/@ICC

கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை

தினத்தந்தி
|
20 July 2024 5:58 PM IST

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 416 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

நாட்டிங்காம்,

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக போப் 121 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் 84 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் அடித்திருந்தது. ஜேசன் ஹோல்டர் 23 ரன்களுடனும், ஜோசுவா டா சில்வா 32 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜோசுவா டி சில்வா நிலைத்து விளையாட மறுமுனையில் விக்கெட் வரிசையாக விழுந்தது. இருப்பினும் கடைசி விக்கெட்டுக்கு அவருடன் கை கோர்த்த ஷமர் ஜோசப் அதிரடியாக விளையாடி அணி முன்னிலை பெற உதவினார். ஜோசுவா டி சில்வா 82 ரன்கள் அடித்த நிலையில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஷமர் ஜோசப் 33 ரன்களில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

முடிவில் வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் 457 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இது இங்கிலாந்தை விட 41 ரன்கள் முன்னிலையாகும். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக கவெம் ஹாட்ஜ் 120 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மேலும் செய்திகள்