வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: முக்கிய வீரர் விலகல்- இலங்கை அணிக்கு பின்னடைவு
|இலங்கை - வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது.
கராச்சி,
இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கையும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசமும் கைப்பற்றின.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 30ம் தேதி சட்டோகிராமில் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த முக்கிய வேகப்பந்து வீச்சாளரான கசுன் ரஜிதா காயம் காரணமாக விலகியுள்ளார். இது இலங்கை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஏனெனில் அவர் முதலாவது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அவருக்கு பதிலாக அசிதா பெர்னண்டோ அணியில் இடம்பெற்றுள்ளார்.