ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: பாக். அணி 264 ரன்களுக்கு ஆல் அவுட்
|ஆஸ்திரேலிய அணி, தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
மெல்போர்ன் ,
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலானடெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 318 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷபிக் (62), ஷான் மசூத் (54) நல்ல தொடக்கம் கொடுத்தனர். இருந்த போதிலும் பாபர் அசாம் (1), சாத் ஷஹீல் (9) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரிஸ்வான் பொறுப்புடன் நின்று விளையாட நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது. ரிஸ்வான் 29 ரன்களுடனும், ஆமிர் ஜமால் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், ரிஸ்வான் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜமால் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுக்க பாகிஸ்தானில் முதல் இன்னிங்சில் 264 ரன்களில் ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளும், நாதன் லயன் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 54 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் கவாஜா முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமலும், லபுஷேன் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி 3 ஓவருக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.