2-வது டெஸ்ட்: வங்காளதேசத்திற்கு எதிராக இலங்கை முதல் நாளில் 314 ரன்கள் குவிப்பு
|வங்காளதேசம் - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் இன்று தொடங்கியது.
சட்டோகிராம்,
வங்காளதேசத்துக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை வென்று, ஒரு நாள் தொடரை கோட்டை விட்டது. அடுத்ததாக இலங்கை- வங்காளதேசம் அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் சிலெட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இலங்கை 328 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். அந்த அணியில் முதல் 3 பேட்ஸ்மேன்களான மதுஷ்கா 57, கருணாரத்னே 86 மற்றும் குசல் மெண்டிஸ் 93 ரன்களும் அடித்து அடித்து அசத்தினர்.
இதன் மூலம் இலங்கை முதல் நாளில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 4 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் குவித்துள்ளது. சண்டிமால் 34 ரன்களுடனும், டி சில்வா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.