< Back
கிரிக்கெட்
2-வது டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக விளையாடும் வீரர்களை அறிவித்த இங்கிலாந்து

image courtesy; PTI

கிரிக்கெட்

2-வது டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக விளையாடும் வீரர்களை அறிவித்த இங்கிலாந்து

தினத்தந்தி
|
1 Feb 2024 2:21 PM IST

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்.

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிகான வீரர்களை இங்கிலாந்து அறிவித்துள்ளது. அதில் மார்க் வுட்டுக்கு பதிலாக அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அணியில் இடம்பிடித்துள்ளார். மேலும் காயம் காரணமாக விலகிய சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச்சிற்கு பதிலாக அறிமுக வீரர் சோயப் பஷிர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி விவரம் பின்வருமாறு;-

பென் ஸ்டோக்ஸ் ( கேப்டன்), ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் போக்ஸ், ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, சோயப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

மேலும் செய்திகள்