< Back
கிரிக்கெட்
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்; இங்கிலாந்து ஆடும் லெவன் அறிவிப்பு

image courtesy: ICC

கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்; இங்கிலாந்து ஆடும் லெவன் அறிவிப்பு

தினத்தந்தி
|
28 Aug 2024 8:59 AM IST

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

லண்டன்,

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை லண்டனில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான இங்கிலாந்தின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் முந்தைய ஆட்டத்தின் போது காயம் அடைந்த மார்க் வுட்டிற்கு பதிலாக ஆலி ஸ்டோன் இடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்து ஆடும் லெவன் விவரம்; பென் டக்கட், டேன் லாரன்ஸ், ஆலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக் (துணை கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், ஆலி ஸ்டோன், ஷோயப் பாஷீர்.



மேலும் செய்திகள்