பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்; விளையாடும் வீரர்களை அறிவித்த இங்கிலாந்து
|பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
முல்தான்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி முல்தானில் நாளை தொடங்குகிறது. இதையடுத்து இந்த போட்டிக்கான விளையாடும் வீரர்களை இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது. கடந்த போட்டியில் களம் இறங்காத கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்த போட்டியில் களம் இறங்குகிறார்.
மேலும், கடந்த போட்டியில் விளையாடிய கஸ் அட்கின்சன் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக மேத்யூ பாட்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி விவரம்;
ஜேக் க்ராவ்லி, பென் டக்கட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), பிரைடன் கார்ஸ், மேத்யூ பாட்ஸ், ஜாக் லீச், சோயப் பஷீர்.