< Back
கிரிக்கெட்
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்; முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 187 ரன்கள்...!

image courtesy; twitter/ @ICC

கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்; முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 187 ரன்கள்...!

தினத்தந்தி
|
26 Dec 2023 3:05 PM IST

பாகிஸ்தான் அணி தரப்பில் ஆகா சல்மான், ஹசன் அலி மற்றும் அமீர் ஜமால் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

மெல்போர்ன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னர் மற்றும் கவாஜா ஒரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் அடித்த நிலையில் வார்னர் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே கவாஜாவும் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் சுமித் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். இதனிடையே ஆஸ்திரேலிய அணி 42.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மார்னஸ் லாபுசாக்னே 14 ரன்களிலும், சுமித் 2 ரன்களிலும் களத்தில் இருந்தனர். பின்னர் மழை நின்றவுடன் ஆட்டம் தொடங்கப்பட்டது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சுமித் அவுட்டானார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 66 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் அடித்துள்ளது. மார்னஸ் லாபுசாக்னே மற்றும் டிராவிஸ் ஹெட் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஆகா சல்மான், ஹசன் அலி மற்றும் அமீர் ஜமால் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்