< Back
கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்; விளையாடும் வீரர்களை அறிவித்த பாகிஸ்தான்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்; விளையாடும் வீரர்களை அறிவித்த பாகிஸ்தான்

தினத்தந்தி
|
14 Oct 2024 6:34 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான விளையாடும் வீரர்களை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

முல்தான்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி முல்தானில் நாளை தொடங்குகிறது. இதையடுத்து இந்த போட்டிக்கான விளையாடும் வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது.

இந்த அணியில் இருந்து முன்னணி வீரர்களான பாபர் அசாம், ஷாகின் அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக நோமன் அலி, சஜித் கான், ஜாஹித் மஹ்மூத், கம்ரான் குலாம் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் விளையாடும் அணி விவரம்;

சைம் அயூப், அப்துலா ஷபீக், ஷான் மசூத் (கேப்டன்), கம்ரான் குலாம், சவுத் ஷகீ, முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சல்மான் அலி ஆகா, அமிர் ஜமால், நோமன் அலி, சஜித் கான், ஜாஹித் மஹ்மூத்.



மேலும் செய்திகள்