இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்; ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தல்
|இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது.
விசாகப்பட்டினம்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்திருந்தது.
இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும், அஸ்வின் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணியில் ரோகித் 14 ரன், சுப்மன் 34 ரன், ஸ்ரேயாஸ் 27 ரன், பட்டிதார் 32 ரன், அக்சர் 27 ரன், பரத் 17 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இந்நிலையில் 2ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.
தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் அஸ்வின் 20 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மறுமுனையில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அவர் 277 பந்துகளில் 201 ரன்கள் அடித்து அசத்தினார். இதில் 18 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸ் அடங்கும்.