2-வது டி20 போட்டி; வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்!
|முதலாவது டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
பார்படாஸ்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் தோல்வியிலிருந்து எழுச்சி பெற இங்கிலாந்து அணி போராடும். அதே வேளையில் சொந்த மண்ணில் வெற்றி பெற வெஸ்ட் இண்டீஸ் அணி போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.