< Back
கிரிக்கெட்
2வது டி20: இந்தியாவின் வெற்றிக்கு 100 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து
கிரிக்கெட்

2வது டி20: இந்தியாவின் வெற்றிக்கு 100 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து

தினத்தந்தி
|
29 Jan 2023 3:26 PM GMT

நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்துள்ளது.

லக்னோ,

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமிடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 0-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் 2வது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக டிவோன் கான்வேயும், பின் ஆலனும் களமிறங்கினர். இருவரும் தலா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மார்க் சாப்மேன் 14 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சில் நியூசிலாந்து வீரர்கள் ரன்களை குவிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய தரப்பில் அர்ஸ்தீப் சிங் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

மேலும் செய்திகள்