< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
2வது டி20 போட்டி; ஆப்கானிஸ்தான் - யுஏஇ அணிகள் இன்று மோதல்..!
|31 Dec 2023 3:43 AM IST
யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
ஷார்ஜா,
யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 29ம் தேதி ஷார்ஜாவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் யுஏஇ-யை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கும்.
அதே வேளையில் தொடரை இழக்காமல் இருக்க யுஏஇ அணி வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.