< Back
கிரிக்கெட்
2-வது டி20 ; சமரவிக்ரம அதிரடி அரைசதம்.. ஆப்கானிஸ்தானுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த இலங்கை

image courtesy; twitter/@OfficialSLC

கிரிக்கெட்

2-வது டி20 ; சமரவிக்ரம அதிரடி அரைசதம்.. ஆப்கானிஸ்தானுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த இலங்கை

தினத்தந்தி
|
19 Feb 2024 9:08 PM IST

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

தம்புள்ளா,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் இலங்கை அணி கைப்பற்றியது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் பின்னர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. குறிப்பாக சமரவிக்ரம - மேத்யூஸ் ஜோடி அதிரடியில் வெளுத்து வாங்கியது. சிறப்பாக விளையாடிய சமரவிக்ரம அரைசதம் அடித்து அசத்தினார். மேத்யூஸ் தனது பங்குக்கு ஹாட்ரிக் சிக்சர் உட்பட 42 ரன்கள் குவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை 187 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு 188 ரன்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அஸ்மத்துல்லா ஓமர்சாய் மற்றும் முகமது நபி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

ஆப்கானிஸ்தான் இலக்கை நோக்கி களமிறங்கி விளையாடி வருகிறது.

மேலும் செய்திகள்