< Back
கிரிக்கெட்
2வது அரையிறுதிப்போட்டி: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு
கிரிக்கெட்

2வது அரையிறுதிப்போட்டி: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

தினத்தந்தி
|
10 Nov 2022 1:13 PM IST

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

அடிலெய்டு,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் இன்று அடிலெய்டு ஓவலில் அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், இங்கிலாந்தும் மல்லுக்கட்டுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளும் கிட்டத்தட்ட சரிசம பலத்துடனே தென்படுகிறது. அதனால் நெருக்கடியை திறம்பட சமாளிக்கும் அணியின் கையே ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்விரு அணிகளும் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12-ல் இந்தியாவும், 10-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்