< Back
கிரிக்கெட்
2-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு
கிரிக்கெட்

2-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு

தினத்தந்தி
|
4 Aug 2024 2:05 PM IST

இந்தியா - இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.

கொழும்பு,

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டுக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய நிலையில் தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகள் மோதிய பரபரப்பான முதலாவது ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பந்துவீச உள்ளது.

மேலும் செய்திகள்