< Back
கிரிக்கெட்
2வது ஒருநாள் போட்டி: இந்தியாவின் வெற்றிக்கு 216 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை
கிரிக்கெட்

2வது ஒருநாள் போட்டி: இந்தியாவின் வெற்றிக்கு 216 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை

தினத்தந்தி
|
12 Jan 2023 4:47 PM IST

இலங்கை அணி 39.4 ஓவர்களில் 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

கொல்கத்தா,

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கவுகாத்தியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பெர்னாண்டோ 20 ரன்களும், நுவானிந்து பெர்னாண்டோ 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த குஷல் மெண்டிஸ் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அணியின் நம்பிக்கை நட்சத்திரமான கேப்டன் ஷானகா 4 ரன்களில் குல்தீப்பின் சுழலில் ஆட்டமிழந்து அவுட்டானார். இந்திய பந்துவீச்சாளர்களில் துல்லிய பந்துவீச்சில் இலங்கை வீரர்கள் அடுதடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இலங்கை அணி 39.4 ஓவர்களில் 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் சிராஜ், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

மேலும் செய்திகள்