2வது ஒருநாள் போட்டி; சீன் அப்போட் அரைசதம்...ஆஸ்திரேலியா 258 ரன்கள் சேர்ப்பு
|இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சிட்னி,
வெஸ்ட்இண்டீஸ்-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மெல்போர்னில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேக் ப்ரேசர்-மெக்குர்க் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் ஜேக் ப்ரேசர்-மெக்குர்க் 10 ரன்னிலும், இங்கிலிஸ் 9 ரன்னிலும் அடுத்து களம் இறங்கிய கேமரூன் க்ரீன் 33 ரன்னிலும், ஸ்டீவ் சுமித் 5 ரன்னிலும், லபுஸ்சாக்னே 26 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதையடுத்து மேத்யூ ஷார்ட் மற்றும் ஆரோன் ஹார்டி ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் ஹார்டி 26 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து சீன் அப்போட் களம் இறங்கினார். அதிரடியாக ஆடிய அப்போட் அரைசதம் அடித்து அசத்தினார். இதற்கிடையில் மேத்யூ ஷார்ட் 41 ரன்னில் அவுட் ஆனார். அரைசதம் அடித்த அப்போட்டும் 69 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோடி 3 விக்கெட்டும், அல்சாரி ஜோசப், ரொமரியோ ஷெப்பர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட உள்ளது.