< Back
கிரிக்கெட்
2-வது ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

Image Courtesy: AFP   

கிரிக்கெட்

2-வது ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

தினத்தந்தி
|
8 Sept 2022 9:36 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

கெய்ர்ன்ஸ்,

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அத்தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

இப்போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் வெற்றி பெறுவதற்காக நியூசிலாந்து அணி கடுமையாக போராடும்.

மேலும் செய்திகள்