< Back
கிரிக்கெட்
2வது ஒருநாள் போட்டி; லிட்டில் அபார பந்துவீச்சு...ஜிம்பாப்வேயை வீழ்த்தி  வெற்றி பெற்ற அயர்லாந்து..!

Image Courtesy: @ZimCricketv

கிரிக்கெட்

2வது ஒருநாள் போட்டி; லிட்டில் அபார பந்துவீச்சு...ஜிம்பாப்வேயை வீழ்த்தி வெற்றி பெற்ற அயர்லாந்து..!

தினத்தந்தி
|
16 Dec 2023 9:09 AM IST

அயர்லாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜோசுவா லிட்டில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஹராரே,

அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை 2-1 என அயர்லாந்து அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த 13ம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி அயர்லாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஜிம்பாப்வே அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 166 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அயர்லாந்து தரப்பில் ஜோசுவா லிட்டில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 167 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அயர்லாந்து அணி 40.1 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 170 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அயர்லாந்து அணி தரப்பில் கர்டிஸ் கேம்பர் 66 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அயர்லாந்து அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.

மேலும் செய்திகள்