< Back
கிரிக்கெட்
இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சு தேர்வு

Image Courtesy: BCCI Women

கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சு தேர்வு

தினத்தந்தி
|
21 Sept 2022 5:22 PM IST

இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

கேன்டர்பரி,

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் 2-வது ஆட்டத்தில் இரு அணிகளும் கேன்டர்பரி நகரில் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டத்துகான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்