< Back
கிரிக்கெட்
2வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
கிரிக்கெட்

2வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
21 Sept 2024 2:00 AM IST

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

நாட்டிங்காம்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி நாட்டிங்காமில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 49.4 ஓவர்களில் 315 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.அடுத்து 316 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் சதமடித்தார்.

இதனால் ஆஸ்திரேலியா 44 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றியின் மூலம் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி லீட்சில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ்5 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் செய்திகள்