< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பள்ளிக்கு அருகில் எரிவாயு கசிவு: 24 மாணவர்கள் உடல்நலம் பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி
|11 Aug 2023 4:10 PM IST
டெல்லியில் பள்ளிக்கு அருகில் ஏற்பட்ட எரிவாயு கசிவின் காரணமாக 24 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள நரைனா பகுதியில் உள்ள முனிசிபல் பள்ளிக்கு அருகில் ஏற்பட்ட எரிவாயு கசிவின் காரணமாக 24 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 19 மாணவர்கள் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்ற மாணவர்கள் ஆச்சார்யா ஸ்ரீ பிக்ஷு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்போது அனைத்து மாணவர்களும் நலமாக உள்ளனர். அவர்கள் இரு மருத்துவமனைகளிலும் மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடிமை சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனைகளுக்கும், பள்ளிக்கும் சென்று விசாரித்தனர். மேலும் டெல்லி மாநகராட்சியின் கல்வித் துறையும் இதுகுறித்து விசாரித்து வருகிறது.