< Back
கிரிக்கெட்
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி எப்போது..? - ஐ.சி.சி. அறிவிப்பு

கோப்புப்படம்

கிரிக்கெட்

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி எப்போது..? - ஐ.சி.சி. அறிவிப்பு

தினத்தந்தி
|
3 Sept 2024 4:14 PM IST

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இறுதிப்போட்டி லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

துபாய்,

ஒருநாள், இருபது ஓவர் போட்டிகளைத் தொடர்ந்து, டெஸ்ட் கிரிக்கெட்டைக் காப்பாற்ற ஐ.சி.சி. அறிமுகப்படுத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கவுரவமிக்கதாகக் கருதப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி, தோல்வி, டிரா ஆகியவற்றின் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கான அணிகள் தேர்வாகின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தொடரின் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இதில் கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நடந்த முதலாவது சீசனுக்கான இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.

இதையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2வது சீசனுக்கான இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதையடுத்து தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 3வது சீசன் (2023-2025) நடைபெற்று வருகிறது.

இதில் மொத்தம் 9 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளன. இந்த சீசனின் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் எப்போது? நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு (2025) ஜூன், 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 16ம் தேதி ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்