< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். தொடரில் இருந்து ஹாரி புரூக் விலகல்

Image : AFP 

கிரிக்கெட்

ஐ.பி.எல். தொடரில் இருந்து ஹாரி புரூக் விலகல்

தினத்தந்தி
|
13 March 2024 4:13 PM IST

2024 ஐ.பி.எல். தொடரில் இருந்து டெல்லி அணி வீரர் ஹாரி புரூக் விலகியுள்ளார்.

புதுடெல்லி,

ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. இதையடுத்து இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை பி.சி.சி.ஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐ.பி.எல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் 2024 ஐ.பி.எல். தொடரில் இருந்து டெல்லி அணி வீரர் ஹார்ரி புரூக் விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹார்ரி புரூக்கை ரூ.4 கோடிக்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. ஹார்ரி புரூக் விலகியுள்ளது டெல்லி அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்