< Back
கிரிக்கெட்
2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ஆஸி.450/2, இந்தியா 65க்கு ஆல்-அவுட்: ஆஸ்திரேலிய வீரரின் கணிப்பு...!

Image Courtesy: AFP 

கிரிக்கெட்

2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ஆஸி.450/2, இந்தியா 65க்கு ஆல்-அவுட்: ஆஸ்திரேலிய வீரரின் கணிப்பு...!

தினத்தந்தி
|
9 May 2023 10:36 AM IST

2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா இந்திய அணியை வீழ்த்தும் என ஆஸ்திரேலிய வீரர் கூறியுள்ளார்.

டெல்லி,

இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தீவிரமாக விளையாடி வருகின்றன. இந்த தொடரி முடிவடைந்த பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்திலும், இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் இந்தியாவிலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலியா ஆல்-அவுட் செய்து வீழ்த்தும் என ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,

உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா தோல்வி அடையாத அணியாக இருக்கும். இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தும். ஆஸ்திரேலியா இறுதி ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து 450 ரன்களை குவிக்கும். இந்தியா 65 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தற்போதைய ஐபிஎல் தொடரில் மிட்செல் மார்ஷ் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்