< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
2023 உலக கோப்பை: மத்திய அரசிடம் வரி விலக்கு பெற்று தராவிட்டால், பெரும் தொகையை இழக்கும் பிசிசிஐ!
|14 Oct 2022 1:48 AM IST
மத்திய அரசிடம் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் வரி விலக்கு பெற்று தராவிட்டால் பெரும் தொகையை இழக்க நேரிடும் என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மும்பை,
50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கு ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி மத்திய அரசிடம் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் வரி விலக்கு பெற்று தராவிட்டால் பெரும் தொகையை இழக்க நேரிடும் என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வரிவிலக்கு கிடைக்காத சூழல் ஏற்பட்டால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) மத்திய வருவாய் பகிர்வில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.477 கோடி முதல் ரூ.954 கோடி வரை இழக்க வேண்டி இருக்கும்.