2023 ஐசிசி டெஸ்ட் அணி: இரண்டு இந்திய வீரர்களுக்கு இடம்...கேப்டன் யார் தெரியுமா..?
|2023-ம் ஆண்டிற்கான டெஸ்ட் கிரிக்கெட் அணியை ஐசிசி அறிவித்துள்ளது.
துபாய்,
2023-ம் ஆண்டிற்கான ஆண்கள் டெஸ்ட் கிரிகெக்ட் அணியை ஐசிசி அறிவித்துள்ளது. 2023 ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்து 2023-ம் ஆண்டிற்கான டெஸ்ட் கிரிக்கெட் அணியை ஐசிசி அறிவித்துள்ளது.
இந்த அணிக்கு ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் 5 ஆஸ்திரேலிய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்த அணியில் ஜடேஜா, அஸ்வின் ஆகிய இரு இந்திய வீரர்களுக்கு இடம் பிடித்துள்ளனர். விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெஸ்ட் அணி விவரம்; உஸ்மான் கவாஜா (ஆஸ்திரேலியா), திமுத் கருணாரத்னே (இலங்கை), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), ஜோ ரூட் (இங்கிலாந்து), டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா), ரவீந்திர ஜடேஜா (இந்தியா), அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர், ஆஸ்திரேலியா), பேட் கம்மின்ஸ் (கேப்டன், ஆஸ்திரேலியா), ரவிச்சந்திர அஸ்வின் (இந்தியா), மிட்செல் ஸ்டார் (ஆஸ்திரேலியா), ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து).