ஐ.பி.எல். தொடரில் 200 விக்கெட்: முதல் வீரராக மாபெரும் வரலாற்று சாதனை படைத்த சாஹல்
|இன்று நடைபெற்று வரும் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சாஹல் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
ராஜஸ்தான்,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் 6 ரன்களில் பவுல்ட் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இஷான் கிஷன் 0 மற்றும் சூர்யகுமார் யாதவ் 10 ரன்களிலும் சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய முகமது நபி சிறிது நேரம் அதிரடி காட்டிய நிலையில் 23 ரன்களில் சாஹல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் ஐ.பி.எல். வரலாற்றில் சாஹலின் 200-வது விக்கெட்டாக பதிவானது.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை சாஹல் படைத்துள்ளார்.