20 ஓவர் உலக கோப்பை தொடர் - இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு..! காயம் காரணமாக ஜானி பேர்ஸ்டோ விலகல்
|காயம் காரணமாக வருகிற 20 ஓவர் உலக கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக ஜானி பேர்ஸ்டோஅறிவித்துள்ளார்.
லண்டன்,
7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். முதல் சுற்றில் விளையாடும் 8 அணிகளில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இந்தப் போட்டிக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகிறது.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லருக்கு இது தான் முதல் உலக கோப்பை ஆகும். இந்த இந்த அணியில் அதிரடி ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ இடம் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் காயம் காரணமாக வருகிற 20 ஓவர் உலக கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக ஜானி பேர்ஸ்டோ அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ;
துரதிர்ஷ்டவசமாக, போட்டிகள் ,சுற்றுப்பயணங்களை தவற விடுகிறேன்.காரணம் ஒரு விபத்தில் எனக்குக் காலில் காயம் ஏற்பட்டது, அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.இன்று காலை நான் கோல்ப் மைதானத்தில் தவறி விழுந்தபோது காயம் ஏற்பட்டது.நான் தைரியமாக இருக்கிறேன், டி20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியா செல்லும் சஅணியினருக்கு முதலில் வாழ்த்துகிறேன்," என்று அவர் கூறியுள்ளார்..