< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: 5 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை
|16 Sept 2022 4:14 AM IST
உலக கோப்பை போட்டியை பார்க்க மொத்தம் 82 நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் 5 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் வாங்கியுள்ளனர்.
துபாய்,
16 அணிகள் இடையிலான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை நடக்கிறது. இந்த உலக கோப்பை போட்டியை பார்க்க மொத்தம் 82 நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் 5 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் வாங்கியுள்ளனர்.
இன்னும் ஒரு சில ஆட்டங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் மட்டுமே இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தெரிவித்துள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் ஆட்டம் அக்டோபர் 23-ந்தேதி மெல்போர்னில் நடக்கிறது. இந்த ஆட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட முதற்கட்ட டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்த நிலையில், தற்போது கூடுதலாக ஒதுக்கப்பட்ட சொகுசு டிக்கெட்டுகளும் தொடங்கிய ஒரு நிமிடத்திற்குள் விற்று விட்டதாக ஐ.சி.சி. கூறியுள்ளது.