20 ஓவர் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் யார்...?
|பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் முதலிடத்தில் நீடிக்கிறார்.
துபாய்,
20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் (861 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார்.
இங்கிலாந்து வீரர் பில் சால்ட் (802 புள்ளி) 2-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (781 புள்ளி) 3-வது இடத்திலும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (761 புள்ளி) 4-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் (755 புள்ளி) 5-வது இடத்திலும், இந்திய வீரர் ஜெய்ஸ்வால் (714 புள்ளி) 6-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க வீரர் ரிலீ ரோசவ் (689 புள்ளி) 7-வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஜோ பட்லர் (680 புள்ளி) 8-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க வீரர் ரீஜா ஹென்ரிக்ஸ் (660 புள்ளி) 9-வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் (657 புள்ளி) 10-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகின்றனர்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் (726 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். இலங்கை வீரர் ஹசரா (687) 2-வது இடமும், வெஸ்ட்இண்டீஸ் வீரர் அகில் ஹூசைன் (664) 3-வது இடமும், இந்திய வீரர் அக்ஷர் பட்டேல் (660) 4-வது இடமும், இலங்கை வீரர் தீக்ஷனா (659), இந்திய வீரர் ரவி பிஷ்னோய் (659) இணைந்து 5-வது இடமும் வகிக்கின்றனர்.
ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இலங்கை வீரர் ஹரசங்கா (228) ஒரு இடம் உயர்ந்து வங்காளதேச வீரர் ஷகிப் உல்-ஹசனுடன் (228) இணைந்து முதலிடத்தை பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி (218) 3-வது இடத்தில் மாற்றமின்றி தொடருகிறார். ஜிம்பாப்வே வீரர் சிகந்தர் ராசா (210) 2 இடம் அதிகரித்து 4-வது இடத்தையும், தென்ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் (205) ஒரு இடம் சறுக்கி 5-வது இடத்தையும், ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் (204) ஒரு இடம் சரிந்து 6-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா (185) 7-வது இடத்தில் நீடிக்கிறார்.