< Back
கிரிக்கெட்
20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை - சூர்யகுமார் யாதவ் முதலிடம்
கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை - சூர்யகுமார் யாதவ் முதலிடம்

தினத்தந்தி
|
21 Dec 2023 5:02 AM IST

பந்து வீச்சாளர் தரவரிசையில் அடில் ரஷித் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார்.

மும்பை,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் (887 புள்ளி) 'நம்பர் ஒன்' இடத்தில் கம்பீரமாக தொடருகிறார்.

2-வது இடத்தில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானும் (787 புள்ளி), 3-வது இடத்தில் தென்ஆப்பிரிக்காவின் மார்க்ரமும் (755 புள்ளி) இருக்கிறார்கள். இதன் பந்து வீச்சாளர் தரவரிசையில் ரஷித்கானை (ஆப்கானிஸ்தான்) பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் முதல்முறையாக 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் செய்திகள்