வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆஸ்திரேலிய அணியிலிருந்து 2 முக்கிய வீரர்கள் விலகல்
|வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
சிட்னி,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் , 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஜே ரிச்சர்ட்சன் இருவரும் விலகியுள்ளனர்.
இவர்களுக்கு பதிலாக பிரேசர்-மெக்குர்க் மற்றும் சேவியர் பார்ட்லெட் ஆகியோர் அறிமுக வீரர்களாக ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி விவரம் பின்வருமாறு;-
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், ஜேக் ப்ரேசர்-மெக்குர்க், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, லான்ஸ் மோரிஸ், மாட் ஷார்ட், ஆடம் ஜாம்பா