இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி - இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
|இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
லண்டன்,
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது.
ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஹோவ் நகரில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்திய அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரும், ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவரான ஜூலன் கோஸ்வாமி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.
அவருக்கு வெற்றியுடன் விடைகொடுக்க இந்திய வீராங்கனைகள் போராடுவார்கள். அதனால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.