இன்னும் 11 விக்கெட்டுகள்...தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாதனை படைப்பாரா அஸ்வின்..?
|இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று தொடங்கியது.
செஞ்சூரியன்,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ரவிச்சந்திரன் அஸ்வின் பிளேயிங் லெவனில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இந்த தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்னும் 11 விக்கெட்டுகள் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது.
இதுவரை இந்திய அணிக்காக 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 489 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த தொடரில் அஸ்வின் 11 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெறுவார். இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 619 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.