< Back
கிரிக்கெட்
தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகள்...நாதன் லயன் புதிய சாதனை...!

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகள்...நாதன் லயன் புதிய சாதனை...!

தினத்தந்தி
|
28 Jun 2023 4:33 PM IST

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது.

லண்டன்,

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதையடுத்து இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் விளையாடி வருகிறார். இந்த ஆட்டத்தில் அவர் களம் இறங்கியதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 100 போட்டிகளில் ஆடிய 6வது வீரர் என்ற சாதனைக்கு நாதன் லயன் சொந்தக்காரர் ஆனார்.

இதற்கு முன்னதாக இந்த சாதனையை 5 பேர் படைத்துள்ளனர். அதில் முதல் 5 இடங்களில் அலெய்டர் குக் (159 ), ஆலன் பார்டர் (153), மார்க் வாக் (107), சுனில் கவாஸ்கர் (106), பிரண்டன் மெக்கல்லம் (101) ஆகியோர் உள்ளனர்.


மேலும் செய்திகள்