ஆசியகோப்பை : இந்திய அணிக்கு 266 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்
|ஷகிப் அல் ஹசன் 80 ரன்களும் , டவ்ஹித் ஹ்ரிடோய் 54 ரன்களும் எடுத்தனர்
கொழும்பு,
ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர்4 சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் மோதுகின்றன.
தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. நேற்று பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது .
எனவே இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியமால் வங்காளதேச அணி தடுமாறியது.அந்த அணியின் லிட்டன் தாஸ் ரன் எதுவும் எடுக்காமலும் , தன்சித் ஹசன் 13 ரன்கள் , அனாமுல் ஹக் 4 ரன்கள் , மெஹிதி ஹசன் மிராஸ் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் கேப்டன் ஷகிப் அல் ஹசன் , டவ்ஹித் ஹ்ரிடோய் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். நிலைத்து ஆடி ரன்கள் குவித்த இருவரும் அரைசதம் அடித்தனர்.
தொடர்ந்து ஷகிப் அல் ஹசன் 80 ரன்களும் , டவ்ஹித் ஹ்ரிடோய் 54 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.பின்னர் சிறப்பாக ஆடி நசும் அகமது 44 ரன்களும் , மகேதி ஹசன் 29ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட் , முகமது ஷமி 2 விக்கெட் வீழ்த்தினர்.