தனி வீடுகள் மற்றும் வில்லாக்கள்
|தனி வீடுகள் அழகான எளிமையை கொண்டது. வில்லாக்கள் அழகான ஆடம்பரமான வசதிகளை கொண்டது. இக்கட்டுரையில் வில்லாக்கள் என்று நாம் குறிப்படுவது கேட்டட் கம்யூனிட்டி என்று அழைக்கப்படும் தொகுப்பு தனி வீடுகளைத்தான்.
தனி வீடுகள் அழகான முற்றங்கள் பின்புற கொள்ளை புறங்கள், மொட்டை மாடிகள், முன்புற வராண்டாக்கள் இவைகளை எல்லாம் கொண்டுள்ளது. வில்லாக்கள் நீச்சல் குளம் தோட்டங்கள் சிறு நீர் வீழ்ச்சி போன்ற பல நவீன வசதிகளை உள்ளடங்கியது.
வில்லாக்கள் பெரும்பாலும் வாயிலில் பாதுகாப்பு பணியாளர்கள் கேமராக்கள் என்று நிறைய பாதுகாப்பு வசதிகள் உள்ளடக்கியதாக இருக்கும். தனி வீடுகளில் வசிப்பவர்கள் தனிப்பட்ட முறையில் அவரவர் விருப்பப்பட்டால் பாதுகாப்பு வசதிகளை அமைத்து கொள்ளலாம்.
தனி வீடுகள் குறைந்த இடத்திலும் நிறைவான அமைப்புகளுடன் எங்கு வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் வில்லாக்கள் கட்டுவதற்கு அதிக பரப்பளவு கொண்ட இடங்கள் தேவைப்படும்.
வில்லாக்கள் அமைப்பதற்கு அதிக பண வசதி தேவைப்படுகிறது. உள்ளே கட்டமைப்பு வேலைகளுக்கும் ஆடம்பரமான வசதிகளுக்கும் அதிக செலவிடுதல் அவசியம். தனி வீடுகளுக்கு கணிசமான குறைந்த முதலீடு போதுமானதாகும். தனி வீடுகளில் வாழும் மக்களின் முறைகளை ஒப்பிடும் பொழுது வில்லாக்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையும் தரமும் முற்றிலும் வேறுபடுகிறது.
வில்லாக்கள் பல நவீன கட்டமைப்புகளோடு அலங்கார வசதிகளுடன் சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களால் அழகான மற்றும் விலை உயர்ந்த தரமான பொருட்களைக் கொண்டு கட்டப்படுகிறது. இது சிறந்த கட்டட அமைப்புக்கும் கட்டட வல்லுநர்களின் திறமைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.
தனித்துவ வீடுகள் குறைந்த முதலீட்டான கட்டமைப்பில் ஆங்காங்கே அனைத்து இடங்களிலும் அமைக்கப்படுகிறது. தனி வீடுகளிலும் நேர்த்தியான முறையில் கட்டமைப்புகள் கட்டப்படுகிறது. தனி வீடுகளிலும் அவரவர்களின் வசதிக்கேற்ப இடத்திற்கு ஏற்பவும் கட்டடங்கள் சிறப்பான முறையில் கட்டப்படுவதும் கட்டட முறைகளின் சிறப்பாகும்.
தனி வீடுகள் என்பது அவரவர் சொந்த இடத்தில் கட்டப்பட்ட சுதந்திரமான தனித்த சொத்துக்கள். வில்லாக்கள் அதிக பரப்பளவில் அதிகமானோர் சேர்ந்து கட்டிய தனி சொத்துக்கள்.
வில்லாக்கள் பொதுவாக ஜிம்கள் பொழுதுபோக்கு கூடங்கள் விளையாட்டு மைதானங்கள் தோட்டங்கள் பூங்காக்கள் நீச்சல் குளங்கள் என குடியிருக்கும் அனைவருக்கும் பொதுவானதாக அமைந்திருக்கும்.
தனித்துவ வீடுகளில் அவர்களுக்கு தேவைப்பட்டால் அவர்களுக்கு என தனியாக இது மாதிரியான வசதிகளை எப்பொழுது வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்.
தனித்துவ வீடுகளில் வீட்டின் விரிவாக்கத்தை அவர்கள் விருப்பப்படி தேவைப்படும் போது அமைத்துக் கொள்ளலாம். வில்லாக்களில் விரிவாக்கங்களோ மாற்றி அமைக்கவோ இயலாது.
தனித்துவ வீடுகளில் வீட்டின் பராமரிப்பு பணிகள் அனைத்தும் வீட்டு உரிமையாளரின் பொறுப்பு ஆகும். வில்லாக்களில் வீட்டின் உட்புற பராமரிப்புகளுக்கு மட்டுமே உரிமையாளர்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்ள முடியும். பொதுவாக உள்ள பராமரிப்புகள் அனைத்தும் கட்டமைப்பில் உள்ள சங்கங்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்ளும். அதற்கான செலவுகளை குடியிருக்கும் அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
வில்லாக்கள் மற்றும் தனித்துவ வீடுகள் எதுவாயினும் அவரவர் வீடுகளுக்கு அவர்களே உரிமையாளர்கள் ஆவார்கள்.