< Back
உங்கள் முகவரி
வெப்பத்தை எதிர்க்கும் அலுமினியம் பெயிண்ட்கள்
உங்கள் முகவரி

வெப்பத்தை எதிர்க்கும் அலுமினியம் பெயிண்ட்கள்

தினத்தந்தி
|
25 Jun 2022 7:09 AM IST

அலுமினிய வண்ணப்பூச்சு என்பது அலுமினிய செதில்கள் மற்றும் கரைப்பான் அடிப்படையிலான வண்ணப்பூச்சு ஆகியவை இணைந்து தயாரிக்கப்படுவதாகும்..இந்த பெயிண்ட் ஒரு அலுமினிய கரைசல் போன்ற தோற்றத்தை கொடுக்கிறது.

அலுமினியம் பெயிண்ட் 150 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையை எதிர்க்கும் திறன் கொண்டது. மேலும் இது நீர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதன் காரணமாக அரிப்பை எதிர்க்கும் திறன் கொண்டதாகவும் விளங்குகிறது.

இந்த வண்ணப் பூச்சிலிருக்கும் எண்ணெய் ஆவியாகின்ற காரணத்தால் இந்த வண்ணப்பூச்சு கடினத் தன்மையை அடைகின்றது.இது உட்புற மற்றும் வெளிப்புற பூச்சிற்கு ஏற்றது. இந்த அலுமினிய பெயிண்ட்கள் உலோக பளபளப்பு மற்றும் பாதுகாப்பு பூச்சு ஆகியவற்றை வழங்குகின்றன.

சேமிப்புத் தொட்டிகள், கூரைகள்( ரூஃப்), குழாய்கள்,உலோகத் தகடுகள்,இயந்திரங்கள்,உலோகக் கதவுகள், ஜன்னல்கள்,மின்சார மற்றும் தந்தி கம்பங்கள்,சூடான நீர் குழாய்கள் போன்ற பல்வேறு வேலைகளில் இந்த அலுமினிய பெயிண்ட்கள் பயன்படுத்தப் படுகின்றன.

இது பொதுவாக ஒரு தொழில்துறை பகுதியில் பூச்சு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

பல்வேறு பரப்புகளில் பயன்படுத்துவதற்கு எளிதான வண்ணப்பூச்சு என்று இவற்றைக் கூறலாம். ப்ரஷ், உருளை(ரோலர்) மற்றும் தெளிப்பான்( ஸ்பிரே) ஆகியவற்றைப் பயன்படுத்தி தேவையான இடங்களில் அலுமினிய வண்ணப்பூச்சை அடிக்கலாம்.

அலுமினிய பெயிண்ட்கள் ஒரு முறை பூசப்பட்ட பிறகு காய்வதற்கு குறைந்தபட்சம் 4 முதல் 6 மணி நேரங்கள் வரையிலும், மறுமுறை பூசப்பட்ட பிறகு காய்வதற்கு 16 முதல் இருபத்தி நான்கு மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்கின்றது.

அலுமினியபெயிண்ட் கலவை

* பேஸ்

* வெஹிகிள்

* பிக்மெண்ட்

* தின்னர் ஆர் சால்வன்ட்

* அடிட்டிவ்ஸ்

இரண்டு தனித்தனி கொள்கலன்களில் வருகின்ற அலுமினிய பெயிண்ட்டை பயன்படுத்துவதற்கு முன் சரியான விகிதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

அலுமினிய வண்ணப்பூச்சின் நன்மைகள்

* வெளிச்சம் குறைவான அறைகளில் கூட வெளிச்சமான தோற்றத்தைக் கொடுக்கிறது.

* நீர் மற்றும் வெப்ப எதிர்ப்பு கொண்டவை.

* உட்புற மற்றும் வெளிப்புற பூச்சுக்கு உகந்தவை.

* மர, தரை மற்றும் உலோக மேற்பரப்புகளுக்கு பயன்படுத்த ஏற்றவை..

*மிகவும் பளபளப்பான மற்றும் உலோக பூச்சு போன்ற தோற்றத்தை தருகின்றது.

* நீடித்து உழைக்கக்கூடிய வண்ணப் பூச்சாக உள்ளது.

அலுமினிய வண்ணப்பூச்சில் கருவிகளின் பயன்பாடு

* பிரஷ்- சிறிய அறைகள் மற்றும் விடுபட்ட சிறு பகுதிகளுக்கு வண்ணப்பூச்சு தேவைப்படும்போது பிரஷ்ஷைப் பயன்படுத்தலாம்.

* உருளை(ரோலர்)-பெயிண்டிங் செய்யவேண்டிய பகுதி பெரியதாகவும், ஒப்பீட்டளவில் மென்மையான பூச்சு தேவைப்படும்போது ரோலரை பெயிண்டிங் கருவியாகப் பயன்படுத்தலாம்.

* தெளிப்பான்( ஸ்பிரே) -பெயிண்ட் செய்யக்கூடிய இடத்திற்கு ஏற்றாற்போல் காற்றில்லாத ஸ்ப்ரே அல்லது ஏர் ஸ்ப்ரே பயன்படுத்தலாம்.

கவனிக்க வேண்டியவை

* குறைந்த வெப்பநிலையில் இவற்றைப் பயன்படுத்த முடியாது..

* இது உலர்வதற்கு அதிக நேரம் தேவைப்படுகின்றது.

* பெயிண்ட் செய்வதற்கு முன் தூசி துகள்கள் இல்லாதவாறு தரையைச் சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால், தரையில் இருக்கும் தூசி துகள்கள் பெயிண்ட் அடித்த மேற்பரப்பில் வந்து ஒட்டிக்கொள்ளும்.

* பெயிண்ட் அடிக்கும் பொழுது எப்பொழுதும் உலர்ந்த பிரஷ்ஷைப் பயன்படுத்தக்கூடாது.ஏனெனில் இது வண்ணப்பூச்சிற்கு மென்மையான முடிவைக்(ஸ்மூத் ஃபினிஷிங்) கொடுக்காது.

* எந்த கொள்கலனை பெயிண்ட் அடிப்பதற்கு எடுக்கிறோமோ அது சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் இருக்கிறதா என்பதை சரி பார்த்த பின்னர் அதில் பெயிண்ட்டை ஊற்ற வேண்டும்.

* ஒரு கோட் பெயிண்ட் அடித்து அது நன்கு உலர்ந்த பிறகு அடுத்த கோட் பெயிண்ட் அடிக்க வேண்டும்.

* ஒவ்வொரு வண்ணப் பூச்சும் நன்கு உலர வேண்டும்.

மேலும் செய்திகள்