புதிய வீட்டில் வாழ்வின் துவக்கம் சுகமாக இருக்க
|நம் அனைவருக்கும் சொந்த வீடு வாங்குவது என்பது வாழ்வின் நோக்கமாக இருந்து வருகிறது. ஒரு புது வீடு வாங்கி அதில் வசிக்கப் போகிறோம் என்ற எண்ணமே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் குடி புகும் வீட்டில் உள்ள பொருட்கள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உண்டு.
ஒரு செயலை செய்வதற்கு முன் திடடம் போட்டு செய்வது நல்லதல்லவா. உங்கள் வீட்டிற்காக நீங்கள் வாங்கிய பொருட்களை, அவர்கள் கனவு கண்டது போல் வீட்டில் அமைக்க எண்ணுவார்கள். அவர்கள் நினைத்த படியே வீட்டை அமைத்து அதில் வசிக்கும் போது அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.
முதலில் அடிப்படை பொருட்கள் அதாவது வீடு என்றால் இந்த பொருட்கள் இருந்தே தீர வேண்டும் என்ற பொருட்களை பாப்போம். அதற்கு முன் உங்களின் பட்ஜெட் என்ன என்பதையும் தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதற்கு நீங்கள் வசிக்கப் போகும் வீட்டின் அளவை அளந்து கொள்ளுங்கள். இது தேவையான பொருட்களை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும். இப்போது அடிப்படையான பொருட்கள் என்னென்ன என்பதையும் பார்ப்போம். அதில் முதலில் எதை வாங்குவது என்பதைப் பற்றி பார்ப்போம். உங்கள் பட்ஜெட்டுக்குள் அவற்றை எப்படி வாங்குவது என்பதை பற்றி பார்ப்போம்.
இவற்றை திட்டமிட நீங்கள் என்ன வகையான வீடு வாங்குகிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது புதிய வீடு அல்லது புதிய அபார்ட்மெண்ட் வாங்குகின்றீர்களா அல்லது பழைய வீட்டை வாங்குகின்றீர்களா அல்லது பழைய அப்பார்ட்மெண்ட்டை வாங்குகிறீர்களா அல்லது செமி- பர்னிஷ்டு அபார்ட்மெண்ட் வாங்குகின்றீர்களா என்பதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம் புதிய வீட்டை வாங்கும் போது நிறைய பொருட்கள் வாங்க வேண்டி இருக்கும். பழைய வீடு அல்லது செமி-பர்னிஷ்டு அப்பார்ட்மெண்ட் வாங்கும் போது குறைவான பொருட்கள் வாங்க வேண்டி இருக்கும்.
எதை முதலில் வாங்குவது எதை பிறகு வாங்குவது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். திட்டமிடாமல் செலவு செய்தால் கணக்கு தெரியாமல் நிறைய பணம் செலவாகும் வாய்ப்பு உள்ளது எனவே முதலில் ஒரு பேப்பரை எடுத்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்து என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்பதை எழுதுங்கள். முதலில் அடிப்படை தேவையான பொருட்களை எழுதுங்கள் பிறகு அலங்காரம் மற்றும் ஆடம்பர பொருட்களை எழுதுங்கள். நீங்கள் வாங்கப் போகும் வீட்டைப் பொறுத்து பொருட்களை வரிசைப்படுத்துங்கள். அதாவது புதிய வீடா, செமி-பர்னிஷ்டு அல்லது பழைய வீடா என்பதை பொறுத்து வரிசைப்படுத்துங்கள்.
ஒருவேளை நீங்கள் வாங்கப் போகும் வீடு பழைய வீடாகவோ பழைய அப்பார்ட்மெண்டாகவோ இருந்தால் அந்த வீட்டில் ஏற்கனவே உள்ள பொருட்களைப் பற்றின பட்டியலை உருவாக்குங்கள். நீங்கள் அந்த வீட்டிற்கு கொடுக்கப் போகும் விலையில் அந்த வீட்டில் உள்ள பொருட்கள் வாஷிங் மெஷின் பிரிட்ஜ், நாற்காலிகள், லைட், ஃபேன் போன்ற பொருட்களும் அடங்கும் என்றால் அந்த பொருட்களை நீங்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இவையெல்லாம் அடிப்படை தேவைகள். இதன் மூலம் நீங்கள் பெரும் பணத்தை சேமிக்கலாம். அக்ரீமெண்டில் கூறியபடி இந்த பொருட்கள் எல்லாம் இருக்கின்றதா என்பதையும் கவனமாக கவனியுங்கள். ஒருவேளை உங்களுடைய பழைய வீட்டின் ஓனர் விட்டுச்சென்ற பொருட்கள் பயனற்றதாகும் அழகற்ற நாற்காலிகளாகவும் பொருட்களாகவும் இருந்தால் அவற்றையெல்லாம் அப்புறப்படுத்துங்கள். உங்கள் வீட்டை அவை அடைத்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்கள் வீட்டருகில் இருக்கின்ற பழைய பொருட்களை வாங்கும் நபர்களை அணுகி அவற்றை விட்டு விடுங்கள் அல்லது ஏதாவது ஒரு தர்ம ஸ்தாபனங்களுக்கு தானமாக கொடுத்து விடுங்கள்.
நீங்கள் குடிபோக இருக்கும் வீட்டின் மின்சார பேன்கள் கூலர் ஹீட்டர் கதவுகள் ஜன்னல்கள் பூட்டுக்கள் போன்றவற்றை சம்மந்தப்பட்ட நபர்களை வைத்து நன்றாக இருக்கிறதா என்று சோதனை செய்து கொள்ளுங்கள். எதிர்காலத்தில் ஏற்படும் திருட்டு விபத்துக்கள் போன்றவற்றை தவிர்க்க முடியும்
அதேபோல் அந்த வீட்டிற்கு குடிபோகும் முன்பு அந்த வீட்டில் உள்ள டெலிபோன் எண்கள், இன்டர்நெட் கனெக்சன், கேபிள் டிவி, போன்றவற்றை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் சிக்கல்கள் இல்லாமல் இருப்பதற்கு இது வழிவகுக்கும்
நீங்கள் குடிபோக இருக்கும் பழைய வீடோ அல்லது அபார்ட்மெண்டிலோ தோட்டம் இருந்தால் அதற்கு தேவையான கருவிகளை வாங்குங்கள் வாங்க வேண்டும். அதற்கு முன் உங்கள் பழைய வீட்டின் உரிமையாளரிடம் அந்தத் தோட்டத்தை எப்படி பராமரிப்பது என்று ஆலோசனை கேளுங்கள். அவர் கூறும் ஆலோசனைகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் செலவுகளை குறைப்பதாகவும் இருக்கும்.
சரி ஒருவேளை நீங்கள் புதிய வீடு வாங்கி குடி போக போவதாக இருந்தால் நீங்கள் எல்லா பொருட்களையும் வாங்கி ஆக வேண்டும், சோபா, சேர்கள் டேபிள்கள், திரை சீலைகள், கார்பெட், கண்ணாடிகள் போன்ற இன்னும் சில பொருட்கள் வாங்க வேண்டி இருக்கும்.
இப்படி திட்டமிட்டு பொருட்களை வாங்கி பின்பு வீட்டை அலங்கரித்தால், சுலபமாகவும் வீட்டில் தேவையற்ற பொருட்கள் இல்லாமலும் அவசியமான பொருட்கள் விடுபடாமலும் இருக்கும். புதிய வீட்டில் வாழ்வின் துவக்கம் சுகமாகவும் இருக்கும்.