< Back
உங்கள் முகவரி
இந்திய கட்டிடக்கலையின் சிறப்புகள்
உங்கள் முகவரி

இந்திய கட்டிடக்கலையின் சிறப்புகள்

தினத்தந்தி
|
1 April 2023 6:21 AM IST

இந்திய கட்டடக்கலை மிகவும் மகத்துவமானது. கலைநயம் மிக்கது. நினைவு சின்னங்கள் மற்றும் பல வரலாற்று கதைகளை பிரதிபலிக்க கூடியது. யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட 830 வரலாற்று தலங்களில் 26 இந்தியாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

1. கோவில் கட்டிடக்கலை: - நாடு முழுவதும் கோவில் கட்டுமானங்கள் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. தட்ப வெப்பம், இயற்கை சூழல், இனம், மொழி என பல வரலாற்று சகாப்தங்களை கொண்டு உருவாக்கப்பட்டது. இந்திய கோயில்கள் மூன்று வகைப்படும். நாகரா என்ற வடக்கு பாணி , வேசரா என்ற கலப்பு பாணி, திராவிடம் என்ற தெற்கு பாணி. கேரளம் , வங்காளம் என்று மற்றும் பல பிரிவுகளும் இதில் உள்ளன.

2. முகலாய கட்டடக்கலை:- முகலாய கட்டடக்கலை இஸ்லாமிய பாரசீகம் மற்றும் இந்திய கலவையான தனித்துவமாகும். பதினாறாம் நூற்றாண்டில் இருந்து 18ஆம் நாள் நூற்றாண்டு முற்பகுதி வரை முகலாய கட்டடக்கலை பெருமளவில் வளர்ந்தது. அக்பர், ஷீமாயின் கல்லறை, செங்கோட்டை, ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் முகலாய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகும்.

3. இந்து சராசெனிக் கட்டிடக்கலை :-

இந்து சராசெனிக் கட்டிடக்கலை என்பது பிரிட்டிஷ்காரர்களின் அற்புதமான கட்டிடக்கலை திறமையாகும். இதில் இந்திய சிறப்பு அம்சங்களின் கலவையும் இணைந்திருக்கும்.

4. திராவிட கட்டடக்கலை:- தென்னிந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே திராவிட கட்டுமான பணிகள் தொடங்கிவிட்டது. அதற்கு முதன்மையான எடுத்துக்காட்டு கோயில்கள். கோயில்களில் கற்களால் செதுக்கப்பட்ட சிலைகள் இடம் பெற்றிருந்தன. தெய்வங்கள், நடன கலைஞர்கள், அரசர்களின் வீரம், போர் முறைகள், புலவர்கள், போர் வீரர்களின் சிலைகள் இடம் பெற்றிருந்தன.

5. கலிங்க கட்டடக்கலை:- பண்டைய காலத்தில் கலிங்க பகுதிகளில் செழித்து வளர்ந்த ஒருவகை கட்டடக்கலை. இவ்வகை கட்டடக்கலை ஒடிசாவிலும் ஆந்திர பிரதேசத்தின் வடக்கு பகுதியிலும் காணப்படுகிறது. கலிங்க கட்டடக் கலை பாணியில் மூன்று வகையான கோயில்கள் உள்ளன. அதாவது ரேகா , காகர மற்றும் பிதா தேயுலா. கலிங்கத்து கட்டடக்கலை வரலாற்று அர்த்தங்கள், பாரம்பரியம், மரபுகள் மற்றும் இணைக்கப்பட்ட புனைவுகளை கொண்டுள்ளது.

6. சீக்கிய கட்டிடக்கலை: - உலகப் புகழ் பெற்ற கட்டிடக் கலைகளில் இதுவும் ஒன்று. நேர்த்தியான நுணுக்கங்கள், பிரமிக்க வைக்கும் அழகு மற்றும் நேர்க்கோடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் தோற்றங்கள் கொண்டவை இவை. இந்த சீக்கிய கட்டடக்கலை இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மாறிவரும் தேவைக்கு ஏற்ப மாற்றங்களை சிறப்பாக உள்வாங்கிக்கொல்வதாக இருப்பதே இதன் சிறப்பு.

7. வேசரா கட்டிடக்கலை: - இக்கட்டிடக்களை கர்நாடகாவில் உருவானது. இது திராவிட மற்றும் நாகரா கட்டிடக்கலை பாணிகளை ஒருங்கிணைக்கிறது. இது திராவிட மற்றும் நகரா கட்டிட கலையின் சாரத்தை கொண்டுள்ளது. இது பௌத்த சைத்தியங்களின் அரைவட்டவடிவ கட்டிடக்கலையின் அழகை கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்