நம் வீட்டிலும் தூய்மையான காற்று
|வீட்டில் உள்ள அனைவரின் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது அவர்கள் சுவாசிக்கும் காற்றின் தூய்மையை பொறுத்தது. பழைய வீடுகளில் பார்த்தோம் என்றால் அதிக அளவிற்கு ஜன்னல்கள் வைத்திருப்பார்கள் மேலும் முன்புற கதவை திறந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்து கூடம் வரண்டா என அடுத்த அடுத்த வாசப் படிகளைக் கடந்து பின்புற புழக்கடை வாயில் வரையில் சென்றடையலாம். காற்று வீட்டின் ஒரு பகுதியில் நுழைந்தால் அடுத்த பகுதி வழியே வெளியேறும். இதுதான் தடைபடாத காற்றோட்டம். இதனால் உள்ளே வாசப்படி மூலமோ சாளரங்கள் வழியாகவோ நுழையும் காற்று வேறு வாயிற்படி சாளரங்கள் வழியாக வெளியே செல்லும்போது வீட்டை தூய்மைப்படுத்தும். தற்போதைய வீடுகள் குடோன்கள் போல கட்டப்படுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். போதுமான பிராணவாயு வீட்டிற்குள் இல்லை என்றால் மந்தமான ஒரு செயல்பாட்டிற்கு இயல்பாக தள்ளப்படுவீர்கள்.
நகர்புற வாழ்க்கையில் ஜன்னலையும் கதவையும் திறந்து வைத்தால் வெளியே உள்ள அனைத்து குப்பைகளும் அல்லவா உள்ளே வருகிறது என்பவர்கள், ஏர் பியூரிபியர்களை வாங்கி வைக்கலாம். இவைகள் உள்ளே நுழையும் காற்றை சுத்தப்படுத்தி தூய்மையான காற்றை உள்ளே அனுப்பும். மேலும் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு பிராணவாயு வெளியிடக்கூடிய அற்புதமான வீட்டிற்குள் வளரக்கூடிய செடிகளை வைக்கலாம். இவைகளை ஜன்னல் ஓரமாக மற்றும் பால்கனியில் சூரிய ஒளி படும்படி வைத்தால் நல்ல பராமரிப்பு இருந்தால் சிறப்பாக வளரும். குறிப்பிட்ட சில மரங்கள் தாவரங்களை நகர்புறமாக இருக்கும்போதும் கிடைக்கின்ற சிறிய சிறிய இடங்களில் கூட வைக்க முடியும். இவை அந்த சுற்றுப்புறத்தையே தூய்மையாக வைத்துக் கொள்ளும். ஏர் பியூரிபையர்கள் வைத்திருப்பவர்களும் வீட்டிற்கு ஏசி உபயோகப்படுத்துபவர்களும் அவ்வப்போது அந்த டக்டில் சேரும் அழுக்குகளை சுத்தம் செய்ய வேண்டும். தூய்மையான காற்றை சுவாசிக்க முடியாமல் போவதால் தான் ஆஸ்துமா மற்றும் அவை தொடர்பான தொடர் இருமல் மூச்சுத் திணறல், நுரையீரல் தொடர்பான நோய்கள் வருகின்றன. வீட்டில் குறைந்த இடத்தில் அதிகம் பேர் வசிப்பது தவிர்க்கலாம். கொசு விரட்டுவதற்காக தொடர்ந்து கொசுவத்தி சுருள் ரிப்பல்லென்ட் போன்றவற்றை உபயோகிப்பது குறைக்கலாம். நீங்கள் உபயோகிக்கும் குளிர்பதனப்பெட்டி சிஎப்சி ஃப்ரீயாக இருப்பின் மேலும் நல்லது. உணவு 3 வேளை தேவை ஆனால் நம் சுவாசம் எப்போதுமே தேவை எனவே நாம் சுவாசிக்கும் காற்றின் தூய்மை தான் நம் ஆரோக்கியமான வாழ்க்கையின் அடிப்படை.நம் வீட்டிலும் தூய்மையான காற்று
வீட்டில் உள்ள அனைவரின் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது அவர்கள் சுவாசிக்கும் காற்றின் தூய்மையை பொறுத்தது. பழைய வீடுகளில் பார்த்தோம் என்றால் அதிக அளவிற்கு ஜன்னல்கள் வைத்திருப்பார்கள் மேலும் முன்புற கதவை திறந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்து கூடம் வரண்டா என அடுத்த அடுத்த வாசப் படிகளைக் கடந்து பின்புற புழக்கடை வாயில் வரையில் சென்றடையலாம். காற்று வீட்டின் ஒரு பகுதியில் நுழைந்தால் அடுத்த பகுதி வழியே வெளியேறும். இதுதான் தடைபடாத காற்றோட்டம். இதனால் உள்ளே வாசப்படி மூலமோ சாளரங்கள் வழியாகவோ நுழையும் காற்று வேறு வாயிற்படி சாளரங்கள் வழியாக வெளியே செல்லும்போது வீட்டை தூய்மைப்படுத்தும். தற்போதைய வீடுகள் குடோன்கள் போல கட்டப்படுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். போதுமான பிராணவாயு வீட்டிற்குள் இல்லை என்றால் மந்தமான ஒரு செயல்பாட்டிற்கு இயல்பாக தள்ளப்படுவீர்கள்.
நகர்புற வாழ்க்கையில் ஜன்னலையும் கதவையும் திறந்து வைத்தால் வெளியே உள்ள அனைத்து குப்பைகளும் அல்லவா உள்ளே வருகிறது என்பவர்கள், ஏர் பியூரிபியர்களை வாங்கி வைக்கலாம். இவைகள் உள்ளே நுழையும் காற்றை சுத்தப்படுத்தி தூய்மையான காற்றை உள்ளே அனுப்பும். மேலும் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு பிராணவாயு வெளியிடக்கூடிய அற்புதமான வீட்டிற்குள் வளரக்கூடிய செடிகளை வைக்கலாம். இவைகளை ஜன்னல் ஓரமாக மற்றும் பால்கனியில் சூரிய ஒளி படும்படி வைத்தால் நல்ல பராமரிப்பு இருந்தால் சிறப்பாக வளரும். குறிப்பிட்ட சில மரங்கள் தாவரங்களை நகர்புறமாக இருக்கும்போதும் கிடைக்கின்ற சிறிய சிறிய இடங்களில் கூட வைக்க முடியும். இவை அந்த சுற்றுப்புறத்தையே தூய்மையாக வைத்துக் கொள்ளும். ஏர் பியூரிபையர்கள் வைத்திருப்பவர்களும் வீட்டிற்கு ஏசி உபயோகப்படுத்துபவர்களும் அவ்வப்போது அந்த டக்டில் சேரும் அழுக்குகளை சுத்தம் செய்ய வேண்டும். தூய்மையான காற்றை சுவாசிக்க முடியாமல் போவதால் தான் ஆஸ்துமா மற்றும் அவை தொடர்பான தொடர் இருமல் மூச்சுத் திணறல், நுரையீரல் தொடர்பான நோய்கள் வருகின்றன. வீட்டில் குறைந்த இடத்தில் அதிகம் பேர் வசிப்பது தவிர்க்கலாம். கொசு விரட்டுவதற்காக தொடர்ந்து கொசுவத்தி சுருள் ரிப்பல்லென்ட் போன்றவற்றை உபயோகிப்பது குறைக்கலாம். நீங்கள் உபயோகிக்கும் குளிர்பதனப்பெட்டி சிஎப்சி ஃப்ரீயாக இருப்பின் மேலும் நல்லது. உணவு 3 வேளை தேவை ஆனால் நம் சுவாசம் எப்போதுமே தேவை எனவே நாம் சுவாசிக்கும் காற்றின் தூய்மை தான் நம் ஆரோக்கியமான வாழ்க்கையின் அடிப்படை.