சுவர்களுக்கு பெயிண்ட் அடிக்கப் போகிறீர்களா?
|நம் வீடுகளுக்கு பெயிண்ட் அடித்து வீட்டை அழகான தோற்றத்துடன் பார்ப்பது என்பது மனதுக்கு மிகவும் இனிமையான உணர்வைக் கொடுக்கும். ஆனால், பெயிண்ட் அடித்து ஒரு வார காலம் கூட அந்த வாசனையானது அறைகளை விட்டுப் போகாமல் ஒருவிதமான அசௌகரியமான உணர்வைக் கொடுக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் அந்த வாசனை விரைவில் வெளியேற என்ன முயற்சிகளை மேற்கொள்வது என்பதைப்பற்றி பார்க்கலாம்.
பெயிண்ட் வாசனையை அகற்றுவதற்கான வழிமுறைகள்:
சில நேரங்களில் வீட்டிற்கு புதிதாக பெயிண்ட் அடிக்கும் பொழுது பெயிண்டிங் புகையானது கண்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். அதேபோல் சிலருக்கு இந்த வாசனை அலர்ஜியை உண்டாக்கும். எனவே இந்த வாசனையை இயற்கையாக வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு அகற்றுவதற்குண்டான சில வழிமுறைகளை இப்பொழுது பார்க்கலாம்.வீட்டிற்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் பொழுதே கூட இந்த வழிமுறைகளை செயல்படுத்தி வாசனையை விரைவில் அகற்றலாம்.
* பேக்கிங் சோடா
* வெங்காயம்
* மரக்கரி (சார்கோல்)
* எலுமிச்சைச்சாறு
* வினிகர்
* காஃபி பவுடர்
* இயற்கைச் சாறுகள்
* மெழுகுவர்த்திகள்
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை சலவைத் துணிகளிலிருக்கும் வியர்வை நாற்றம் மற்றும் அழுக்கை போக்குவதற்கும் , குளிர்சாதன பெட்டியில் உள்ள துர்நாற்றத்தை உறிஞ்சுவதற்கும் உபயோகப்படுத்தலாம் என்பது அனைவரும் அறிந்ததே.இதே முறையில் பெயிண்ட் அடிக்கும் பொழுது ஏற்படும் வாசனை மற்றும் புகையை உறிஞ்சுவதற்காக பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தலாம்.பேக்கிங் சோடாவை ஏந்திய கிண்ணங்களில் வைத்து அறை முழுதும் ஐந்தாறு இடங்களில் வைக்கலாம். பெயிண்ட் அடித்து முடித்த பிறகு வைத்திருக்கும் பேக்கிங் சோடாவை குப்பையில் போட்டுவிட்டு மறுபடியும் புதிய பவுடரை அறைகளில் வைக்கும்பொழுது அவை உடனடியாக பெயிண்ட் நறுமணத்தை போக்கிவிடும்.
இவ்வாறு செய்த பிறகும் பெயிண்ட் வாசனை அறைகளில் இருந்தால், தரைவிரிப்பு மற்றும் அறைக்கலன்களின் மீது பேக்கிங் சோடாவை தூவி இரவு முழுவதும் விட்டுவிட வேண்டும். அடுத்த நாள் காலையில் பேக்கிங் சோடாவை சுத்தம் செய்துவிட வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது நறுமணம் சொல்லாமல் கொள்ளாமல் அறையைவிட்டுக் கிளம்பிவிடும்…
வெங்காயம்
சில நேரங்களில் வெங்காய வாசனையே விரும்பத்தகாத ஒன்றாக இருக்கும். ஆனால், வெங்காய வாசனை நம்முடைய நுரையீரலுக்கு எந்த நச்சுத் தீங்கையும் ஏற்படுத்தாது.வெங்காயத்தை அறிந்து வைக்கும் பொழுது அது அருகில் உள்ள நச்சுத் தன்மைகளை உறிஞ்சிக்கொள்ளும். எனவே வெங்காயத்தை அறிந்து வைத்து சமைக்காமல் உடனடியாக சமையலுக்கு உபயோகப் படுத்தி விட வேண்டும்.பெயிண்ட் வாசனையை போக்குவதற்கு வெங்காயத்தை நறுக்கி அறைகளில் ஆங்காங்கே வைக்க வேண்டும்.இது அறையில் இருக்கும் வாலடைல் ஆர்கானிக் காம்பவுண்ட்ஸ் (விஒசி) எனப்படும் அதிக அளவிலான ரசாயனங்களை அகற்றிவிடும்.. இதன் காரணமாக பெயிண்ட் வாசனை அகன்றுவிடும்.
மரக்கரி (சார்கோல்)
செயலிழந்த மரக்கரி சிறந்த துர்நாற்றத்தை உறிஞ்சக்கூடிய தன்மை கொண்டது..மரக்கரித் தூள்களை சிறிய பைகளில் அல்லது கிண்ணங்களில் வைத்து அறைகளில் ஆங்காங்கே வைக்கலாம்.
எலுமிச்சைச்சாறு
நீர் தானாகவே வாலடைல் ஆர்கானிக் காம்பவுண்ட்ஸ் (விஒசி) உறிஞ்சிவிடும் தன்மை கொண்டது. எலுமிச்சைச்சாறைத் தண்ணீருடன் கலந்து வைக்கும்பொழுது அவை புத்துணர்ச்சியூட்டும் சுத்தமான சிட்ரஸ் வாசனையைக் கொடுக்கும்.ஒரு நாள் இரவு முழுவதும் எலுமிச்சைச்சாறை அறைகளில் வைக்கும்பொழுது அவை பெயிண்ட் வாசனையை அகற்றி புத்துணர்ச்சியான நறுமணத்தை அறைக்குள் பரவவிடும்.
வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகர் அல்லது காய்ச்சி வடிகட்டிய வெள்ளை வினிகரை ( டிஸ்டில்டு ஒயிட் வினிகர்) சிறிய கிண்ணங்களில் ஊற்றி அறையின் ஒவ்வொரு மூலையிலும் வைக்கும்பொழுது அவை காற்றில் எந்த கூடுதல் நச்சுத் தன்மையையும் சேர்க்காமல் பெயிண்ட்
காஃபி பவுடர்
உலர்ந்த காஃபி பவுடர்கள் பெயிண்ட் புகைகளை உறிஞ்சுவது மட்டுமல்லாமல், உங்களை புத்துணர்ச்சியாகவும், விழிப்புடனும் வைத்திருக்க உதவுகின்றது.
இயற்கை சாறுகள்
வெண்ணிலா மற்றும் மிளகு பவுடர் கலந்த சாறுகள் பெயிண்ட் வாசனையை அகற்றி அறையின் காற்றை புதுப்பிக்கக்கூடிய இரண்டு எளிய இயற்கைச் சாறுகளாகும். பஞ்சில் இந்த சாறுகளை நனைத்து சிறிய தட்டுகள் அல்லது கிண்ணங்களில் வைத்து அறையில் ஆங்காங்கே வைக்கலாம்.சில பெயிண்டர்கள் இந்த இயற்கைச் சாறுகளின் ஒன்று அல்லது இரண்டு துளிகளை நேரடியாகவே பெயிண்டில் கலந்து அறைக்கு பூசும் பொழுது அது சுகந்தமான மணத்தை அறையினுள் பரவ விடுகின்றது.
மெழுகுவர்த்திகள்
சோயா அடிப்படையிலான அல்லது இயற்கையான தேன்மெழுகு மெழுகுவர்த்திகளை தேர்ந்தெடுத்து உபயோகிக்கும் பொழுது அவை மிகவும் பாதுகாப்பான சுவாசத்தை அளிக்கின்றன.சுகந்த மணத்தை கொடுக்கக்கூடிய மெழுகுவர்த்திகளை அறைகளில் ஏற்றி வைக்கும் பொழுது அவை பெயிண்ட் வாசனை போக்கும் விதத்தில் செயல்படுகின்றன. ஈரமான சுவர்கள் பெயிண்ட் புகையை அடக்கி, நீண்ட நேரம் கழித்து நச்சு வாயுக்களை மெதுவாக வெளியேற்றும்.எனவே பெயிண்ட் ஒரு கோட் அடித்து அது நன்றாக காய்ந்த பின்பே மற்றொரு கோட் அடிக்க வேண்டும்.அதேபோல் பெயிண்ட் மற்றும் பெயிண்ட் பிரஷ்களை உபயோகப்படுத்தாத பொழுது அவற்றை மூடி வைக்க வேண்டும். அறைகளுக்கு பெயிண்ட் செய்யும்பொழுது அறையின் கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும்..இவ்வாறு செய்யும்பொழுது பெயிண்ட் வாசனை மிக விரைவில் அறையை விட்டு வெளியேறி விடும்.