பலனை அள்ளித்தரும் சிவ வழிபாடு
|மாத சிவராத்திரி நாளில், சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், நமசிவாயம் சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம்.
* திருவேத்திபுரம் (செய்யாறு) - ஞானம் கிடைக்கும்.
* திருப்பனங்காடு - பந்த பாசத்தில் இருந்து விடுபடலாம்.
* திருவூறால் (தக்கோலம்) - உயிர்வதை செய்த பாவம் நீங்கும்.
* திருப்பாச்சூர் - குடும்ப கவலைகள் மாறும்.
* திருவெண்ணைநல்லூர் - பித்ரு தோஷம் விலகும்.
* திருவதிகை - நல் மனைவி அமைவார்.
* திருவாண்டார் கோவில் - முக்தி கிடைக்கும்.
* திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) - தீரா பாவம் விலகும்.
* திருக்கருவூர் (கரூர்) - பசுவதையால் ஏற்படும் தோஷம் நீங்கும்.
* திருப்பாண்டிக் (கொடுமுடி) - பித்ரு தோஷம் அகலும்.
* திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) - முக்திபேறு கிடைக்கும்.
* திருகோகர்ணம் (கர்நாடகம்) - தேவ தோஷம் விலகும்.
* திருப்புகழூர் - பெரியோரை அவமதித்த குற்றம் நீங்கும்.
* திருத்தோணிபுரம் (சீர்காழி) - குல சாபம் நீங்கும்.
* திருவைத்தீஸ்வரன் கோவில் - பிணிகள், அங்கார தோஷம் விலகும்.
* திருக்கருப்பறியலூர் (தலை ஞாயிறு) - குரு துரோகம் அகலும்.
* திருப்பனந்தாள் - பிறன்மனை நாடியவர்களின் தோஷம் விலகும்.
* திருப்புறம்பயம் - மரண பயம் நீங்கும்.
* திருநெய்த்தானம் - மோட்சம் வந்துசேரும்.
* திருவானைக்காவல் - கர்மவினை அகலும்.
* திருவேதிக்குடி - தான் எனும் அகந்தையால் ஏற்பட்ட தோஷம் நீங்கும்.
* திருவலஞ்சுழி - வறுமை நீங்கும்.
* திருநாகேஸ்வரம் - சர்ப்ப தோஷம் நிவர்த்தியாகும்.
* திருநாகேஸ்வர சுவாமி (கும்பகோணம்) - நவக்கிரக தோஷம் விலகும்.
* திருநல்லம் (கோனேரிராஜபுரம்) - வேதத்தை பரிகசித்த தோஷம் நீங்கும்.
* திருத்தெளிச்சேரி (காரைக்கால்) - சூரிய தோஷம் நிவர்த்தியாகும்.
* திருத்தலச்சங்காடு (தலைச்செங்காடு) - அடிமை வாழ்வு மறையும்.
* திருவன்னியூர் (அன்னூர்) - முருகப்பெருமானின் அருள் கிடைக்கும்.
* திருநன்னலம் (நன்னிலம்) - ஞானம் வேண்டுபவர்கள் வழிபடலாம்.
* திருராமனாதீச்சுரம் (திருக்கண்ணாபுரம்) - பெண்களின் தோஷங்கள் அகலும்.
* திருமருகல் - கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும்.
* திருச்சிக்கல் - பங்காளி பகை நீங்கும்.
* திருச்சேறை - இல்லறம் சிறப்பாக அமையும்.
* திருக்கோளிலி (திருக்குவளை) - நவகோள்களின் பாதிப்பு மறையும்.
* திருவாய்மூர் - செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபடலாம்.
* திருநெல்லிக்கா - கல்வி மேன்மை அடையும்.
* திருவெண்டுறை (வண்டுறை) - வறுமையில் இருந்து விலக்கு ஏற்படும்.
* திருக்கடிக்குளம் (கற்பகநாதர்குலம்) - வினைகள் அகலும்.
* திருஆலங்குடி - புத்திர தோஷம் விலகும்.
* திட்டை - சந்திர தோஷம் அகலும்.
* பசுபதி கோவில் - ராகு தோஷம் உள்ளவர்கள் வழிபடலாம்.
* கொட்டையூர் - செய்த பாவங்கள் நீங்கும்.
* ஓமாம்புலியூர் - சனி தோஷம் அகலும்.
* தருமபுரம் - சிவனடியாரை அவமதித்த குற்றம் விலகும்.
* மயிலாடுதுறை - அனைத்து பாவங்களும் நீங்கும்.
* உத்தரகோசமங்கை - கர்மவினைகள் அகலும்.
* ராமேஸ்வரம் - பித்ரு தோஷம் விலகும்.
* காளையர்கோவில் - பிறவி பயன் கிடைக்கும்.
* பெண்ணாடம் - ஊழ்வினை தோஷம் அகலும்.
* அவினாசி - ஏழு தலைமுறை பாவங்கள் விலகும்.
* குரங்கினில் முட்டம் - நினைத்த காரியம் நடைபெறும்.
* பவானி - பித்ரு தோஷம் போக்கும்.
* ஆச்சாள்புரம் - மண வாழ்க்கை சிறக்கும்.
* ஆடுதுறை - திருஷ்டி தோஷம் விலகும்.
* சங்கரன்கோவில் - சர்ப்ப தோஷம் நீங்கும்.