< Back
ஆன்மிகம்
வாரம் ஒரு திருமந்திரம்
ஆன்மிகம்

வாரம் ஒரு திருமந்திரம்

தினத்தந்தி
|
1 Nov 2022 7:10 AM IST

திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வரு கிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும் அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

ஆன்மிகம், அன்பு, சைவநெறி பற்றி பேசும், திருமூலர் எழுதிய திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வரு கிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும் அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

சரியாதி நான்கும் தகும்ஞானம் நான்கும்

விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும்

பொருளானது நந்தி பொன்னகர் போந்து

மருளாகும் மாந்தர் வணங்க வைத்தானே.

விளக்கம்:-

சரியையில் ஞானம், கிரியையில் ஞானம், யோகத்தில் ஞானம், ஞானத்தில் ஞானம் என்று, ஞானம் நான்கு வகைப்படும். காபாலம், காணாதம், பாதஞ்சலம், அச்சபாதம், வியாசம், சைமினியம் என வேதாந்த நெறிகள் ஆறு. இவை ஆறும் புறச்சமயங்கள். நந்தியம்பெருமான், ஞான நெறி நான்கினில் உள்ளம் பதிக்கச் செய்து, மனிதர்கள் மயக்கம் அகற்றி இறைவனை வழிபடச் செய்தார்.

மேலும் செய்திகள்