< Back
ஆன்மிகம்
விஜயமங்கலம் விஜயபுரி அம்மன் கோவிலில் தேரோட்டம்
ஈரோடு
ஆன்மிகம்

விஜயமங்கலம் விஜயபுரி அம்மன் கோவிலில் தேரோட்டம்

தினத்தந்தி
|
30 Jun 2023 9:35 PM GMT

விஜயமங்கலம் விஜயபுரி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது.

பெருந்துறை

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற விஜயபுரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அப்போது அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார். இதையடுத்து தேரோட்டம் நடந்தது. முதல் மற்றும் 2-ம் நாள் தேர் இழுக்கும் நிகழ்ச்சிகளில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று (சனிக்கிழமை) தேர் நிலை வந்து சேருகிறது. விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தையொட்டி உள்ள பரந்த பகுதியில் மாட்டுச்சந்தை, குதிரை சந்தை போன்றவை நடந்து வருகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்