< Back
ஆன்மிகம்
பன்னீர் இலையில் விபூதி
ஆன்மிகம்

பன்னீர் இலையில் விபூதி

தினத்தந்தி
|
5 May 2023 1:39 PM IST

செந்தில் ஆண்டவன் அருள்வழங்கும் திருச்செந்தூருக்குச் சென்றால் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பன்னீர் இலையில் வைத்துதான் தருவார்கள். அதற்குக் காரணம் முருகனுக்கு பன்னிரண்டு கரங்கள் உள்ளன. அதே போல பன்னீர் மரத்தின் இலையிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் வீதம் இரண்டு பக்கத்திற்கும் பன்னிரண்டு நரம்புகள் உள்ளன. பன்னிரண்டு நரம்புகள் உள்ளதால் 'பன்னீர் மரம்' என்று அழைக்கப்பட்டது. இதில் ஐஸ்வர்யம் தரும் விபூதியை வைத்து தருவதால், செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம். பன்னீர் இலையை இறைவழிபாட்டில் பயன்படுத்தும் பொழுது, பலன்கள் அதிகம் கிடைக்கும்.

மேலும் செய்திகள்